என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
நீங்கள் தேடியது "பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்"
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
சிங்கப்பூர்:
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7-5, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள்.

எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #WTAFinals #CarolineWozniacki #ElinaSvitolina
சிங்கப்பூர்:
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் நேர் செட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த வோஸ்னியாக்கி முதலாவது செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் 5-5 என்று வரை சமநிலை வந்தது. அதன் பிறகு அடுத்த இரு கேம்களை ஸ்விடோலினா தனதாக்கி, வோஸ்னியாக்கியின் கனவை சிதைத்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி (ஒரு வெற்றி, 2 தோல்வி), கிவிடோவா (3 தோல்வி) வெளியேறினர்.
‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஒசாகா (ஜப்பான்)-கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். #WTAFinal #Singapore #Wozniacki
சிங்கப்பூர்:
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ‘ஒயிட்’ பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. 2-வது தோல்வியை தழுவிய கிவிடோவா இனி அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார்.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை தோற்கடித்தார். #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.51 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார். #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka

உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ஹாலெப் காயம் காரணமாக விலகியுள்ளார். #SimonaHalep
சிங்கப்பூர்:
உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) சேர்க்கப்பட்டுள்ளார். #SimonaHalep

×

X